ஷிவானிஸ்ரீ சிவகுமார்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
fast-topic
Latest topics
» [மின்னூல்] discord.com
by admin Sun Feb 05, 2023 5:50 pm

» உத்திரமேரூர் கல்வெட்டு
by maha Wed Feb 01, 2023 1:53 pm

» உலகம் எப்படிப் பொய் ? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)
by eegarai Sat Jan 28, 2023 5:18 pm

» [செய்தி] உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க வழிகள்!
by admin Wed Jan 25, 2023 8:32 pm

» [கட்டுரை] நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
by admin Wed Jan 25, 2023 12:52 am

» [மருத்துவம்] பாதாம் பயன்கள்
by admin Wed Jan 25, 2023 12:41 am

» சோதனைப் பதிவு
by admin Sun Jan 22, 2023 9:54 pm

» கறிவேப்பிலை சாதம்.
by admin Tue Jan 10, 2023 11:22 am

» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை!
by admin Tue Jan 10, 2023 9:55 am

» My Avatar -அவதார்!
by admin Tue Jan 10, 2023 9:44 am

» வணக்கம் வணக்கம்
by admin Tue Jan 10, 2023 8:11 am

» அழகாகக் கோபப்படுங்கள்.
by admin Wed Dec 28, 2022 2:23 am

» பல் ஈறு வீக்கம், வலிக்கு:
by admin Fri Aug 13, 2021 2:46 am

» தமிழ் மருத்துவம்.
by admin Fri Aug 13, 2021 2:23 am

» தினம் ஒரு திருக்குறள்
by admin Fri Aug 13, 2021 12:29 am

» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்
by admin Thu Aug 05, 2021 11:06 pm

» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்
by admin Thu Oct 18, 2018 8:04 pm

» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்!
by admin Thu Oct 18, 2018 7:52 pm

» இலக்கியங்கள்!
by eegarai Thu Oct 18, 2018 7:17 pm

» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
by admin Sun Oct 07, 2018 10:39 pm

Top posting users this month


வீரர்களின் 'சம்பாத்தியம்'-தோனி முதலிடம்!

View previous topic View next topic Go down

admin
admin
Admin
Posts : 811
Points : 1387
Reputation : 8
Join date : 07/09/2009
Age : 49
https://siva.forumta.net

Postadmin Mon Sep 07, 2009 2:27 am

உலக கிரிக்கெட் வீரர்களிலேயே அதிகளவில் சம்பாதிப்பது இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணிதான். 2வது இடம்தான் சச்சின் டெண்டுல்கருக்குக் கிடைத்துள்ளது.

உலக அளவில் முன்பெல்லாம் கால்பந்து, டென்னிஸ் பிரபலங்கள்தான் பெருமளவில் சம்பாதிப்பார்கள். ஆனால் இப்போது அந்த இடத்திற்கு படு வேகமாக கிரிக்கெட் வீரர்கள் வந்து விட்டனர். அதிலும் இந்திய வீரர்கள்தான் இந்த விஷயத்தில் டாப்பில் உள்ளனர்.

எல்லாம் ஐபிஎல்- வருகைக்குப் பின்னர்தான். அதற்கு முன்பு வரை இந்திய கிரிக்கெட் வீரர்கள் அந்த அளவுக்கு சம்பாதனையை ஈட்டவி்ல்லை. ஆனால் ஐபிஎல் வருகைக்குப் பின்னர் இந்திய வீரர்களின் டிமான்ட் ஏகமாக எகிறி விட்டது.

இப்போதெல்லாம் ஆளுக்கு ஏற்றார் போல டிமான்ட்டும், அவர்களின் சம்பாதனையும் மாறிப் போய் விட்டது.

உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடுவதன் (3 மணி நேரம் கொண்ட ஒரு ஆட்டத்திற்கு மட்டும்) மூலம் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 11 ஆயிரம் டாலர் பணத்தை சம்பாதிக்கிறார்களாம்.

கிரிக்கெட் விளையாட்டு 100 நாடுகளில் உள்ளது. ஐபிஎல் வருகைக்கு முன்பும் கூட ஏகப்பட்ட கிளப் போட்டிகள், உள்ளூர் போட்டிகள் நடந்து வந்தன. ஆனால் ஐபிஎல்-லைப் போல பணத்தை அறுவடை செய்த குழு எதுவும் இல்லை.

ஐபிஎல்லில் ஆடிப் பணம் குவிப்பதற்காக தங்களது கிரிக்கெட் ஓய்வை முன்கூட்டியே அறிவிக்கும் வீரர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அதிக அளவில் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் டோணி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரது ஒரு ஆண்டு வருமானம் 10 மில்லியன் டாலர் ஆகும். இதில் 8 மில்லியன் டாலர் பணத்தை விளம்பரங்களின் மூலமாக பெறுகிறார் டோணி.

இவரது ஒட்டுமொத்த சம்பாத்தியத்தை இப்படியும் கூறலாம் - அதாவது ஒரு ரன்னுக்கு சராசரியாக அவர் 5426 டாலர் பணத்தை சம்பாதிக்கிறார்.

டோணி மொத்தம் 17 நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றுகிறாராம். இந்தியாவில் ஷாருக் கானுக்கு அடுத்து அதிக அளவிலான விளம்பரங்களில் ஆடி வருபவர் டோணிதான்.

2வது இடத்தில் இருப்பவர் டெண்டுல்கர். டோணி விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பு சச்சின்தான் விளம்பரங்களின் நாயகனாக விளங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உள்ள ஐபிஎல் அணிகளில் மும்பை அணியின் ஐக்கான் வீரராக திகழ்கிறார் சச்சின் . ஐகான் வீரர்களுக்கு, அந்த அணியில் அதிக சம்பளம் வாங்கும் வீரரை விட 15 சதவீத சம்பளம் கூடுதலாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 12 மாதங்களில் சச்சினின் சம்பாத்தியம் 8 மில்லியன் டாலராகும். இதில் மும்பை இந்தியன்ஸ் மூலம் கிடைத்த வருவாய் மட்டும் 1.1 மில்லியன் டாலராகும்.

3வது இடத்தைப் பிடித்திருப்பவர் யுவராஜ் சிங். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் மற்றும் ஐகான் வீரராக இருக்கிறார் யுவராஜ் சிங். ஐபிஎல் மூலம் இவர் சம்பாதித்தது 1 மில்லியன் டாலராகும். விளம்பரங்கள் மூலம் சம்பாதித்தது 4 மில்லியன் டாலர்.

நன்றி: தட்ஸ்தமிழ்.

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum